

நாட்றாம்பள்ளியில் தொடங்கப் பட்டுள்ள கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் 4 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவதாக சித்த மருத்துவர் விக்ரம்குமார் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 3 அலை அதிகரித்து வருவதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவ மனைகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற வசதியாக 4 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவ மனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2 அலைகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய மருத்துவத்தை 3-வது அலையிலும் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதில், முதற்கட்டமாக நாட்றாம்பள்ளி வட்டம் அக்ரகாரம் பகுதியில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக்கல்லூரி வளா கத்தில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு சிறப்பு சிகிச்சை மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதில், 30-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். அதில், 4 நாட்களில் கரோனா நோயாளிகள் முழுமை யாக குணமடைந்து வீடு திரும்பு வதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஒருங் கிணைப்பாளரும், அரசு சித்த மருத்துவருமான வி.விக்ரம்குமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது,‘‘மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா ஆலோ சனைப்படி நாட்றாம்பள்ளியில் கரோனா சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. காற்றோட்டமான, விசாலமான இடத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளது. 3 மருத்துவர்கள், 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணித்து அவர்கள் விரைவில் குணமடைய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரோனா சித்த மையத்தில் 14 ஆண்கள், 14 பெண்கள், ஒரு சிறுவன், ஒரு சிறுமி என இதுவரை 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உணவு வகைகள், மூலிகை குடிநீர், யோகாசனம், மூச்சு பயிற்சி, நடைபயிற்சி ஆகியவை வழங்கி வருகிறோம். இதன் மூலம் 4 நாட்களில் கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மண் பானையில் உணவு சமைத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். தினசரி, நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், இஞ்சி தேநீர், சுண்டல் ஆகியவை வழங்கப் படுகிறது. கரோனா சிகிச்சை மையத்தில் தங்கியுள்ள நோயாளிகள் மருத்துவமனையில் இருப்பதாக உணர்வதில்லை. வீட்டில் தங்கியபடி சிகிச்சை எடுப்பதை போன்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்.
இங்குள்ளவர்களுக்கு உணவையே மருந்தாக வழங்கு வதால் கரோனா, ஒமைக்ரான் போன்ற கொடிய வைரஸாக இருந்தாலும் அதை எளிதாக சமாளிக் கக்கூடிய திறன் அவர்களுக்கு ஏற்படுகிறது’’ என்றார்.