படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக மீனவர்கள் கோரிக்கை

படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக மீனவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடப்படும் என அறிவித்துள்ள இலங்கை அரசின் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாகக்கூறி அந்நாட்டு கடற்படையினரால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தப் படகுகளை அரசுடைமையாக்கியுள்ள இலங்கை அரசு படகுகள் பகிரங்க ஏலம் விடப்படும் என அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்ல நிலையில் உள்ள படகுகளை அதன் உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், சேதமடைந்துள்ள படகுகளை ஏலத்தில் விட்டு அதன்மூலம் கிடைக்கும் தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in