Published : 02 Apr 2016 09:49 AM
Last Updated : 02 Apr 2016 09:49 AM

ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கூடுதல் பொறுப்பு

அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் கூடுதல் பொறுப்பாக அரசு பொது மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக (டிஎம்இ) இருந்த எஸ்.கீதாலட்சுமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஆர்.விமலா, மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பை யும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநராக ஆர்.விமலா கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், கூடுதல் பொறுப்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக 2 நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x