Published : 19 Apr 2016 02:22 PM
Last Updated : 19 Apr 2016 02:22 PM

பாமக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாமகவின் 6-வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். ஏற்கெனவே பாமக 229 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். உளுந்துர்பேட்டையில் விஜயகாந்தை எதிர்த்து பாமக வேட்பாளர் பாலு களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எஞ்சியுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

1. கொளத்தூர் - கோபால்

2. துறைமுகம் - சுரேஷ்குமார்

3. ஆர்.கே.நகர் - ஆர்கினட்ஸ்

4. ஆவடி - ஆனந்தகிருஷ்ணன்

5. சிவகாசி - சிவநாதபாபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x