

கரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமூத்த தலைவர் என்.சங்கரய்யா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து உத்தரவிட்டதுடன் தொடர்ந்து உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.