

விருத்தாசலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் அடைத்த வீதிகளை திருமண நிகழ்வுக்காக திமுகவினர் தன்னிச் சையாக அகற்றியுள்ளனர்.
கரோனா பரவல் காரணமாககடலூர் மாவட்டம் விருத்தாச லத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தகரங்களை கொண்டு அடைத்து வருகின்றனர். அந்த வகையில் தெற்கு பெரியார் நகரில் சூரியகாந்தி பூ தெரு, தமிழர் வீதி, கண்ணதாசன் வீதி, முல்லை நகர், டிரைவர் காலனி ஆகிய பகுதிகளில் 21 பேருக்கு தொற்று இருப்பதால் மேற்கண்ட பகுதிகளை இணைக்க கூடிய அம்பேத்கர் சாலையை தகரம் கொண்டு இரு தினங்களுக்கு முன் நகராட்சி நிர்வாகம் அடைத்தனர்.
இந்த நிலையில் அம்பேத்கர் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக பிரமுகர் இல்ல நிகழ்ச்சி இன்று நடை பெறுகிறது.
இதையொட்டி, அங்கு கட்சி யினர் உள்ளிட்ட பலர் வரக் கூடும் என்பதால், அம்பேத்கர் நகர் தடுப்பை திமுகவினர் அகற் றியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தங்களிடம் யாரும் கேட்கவில்லை என்றனர்.
"இன்று முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டிருக்கும் நிலையில், திருமண நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை. அப்பகுதியில் கரோனாபரவல் அதிகம் என அறிவிக்கப் படிருந்தும், அதற்கான பாதையை திமுகவினர் தன்னிச்சையாக அகற்றியிருப்பது அதிகார துஷ் பிரயோகத்தை அவர்கள் கையில் எடுத்திருப்பதை காட்டுகிறது" என்கின்றனர் அதிமுகவினர்.