Published : 11 Apr 2016 07:28 AM
Last Updated : 11 Apr 2016 07:28 AM

‘ஒரு மனிதன் ஒரே மதிப்பு’ எனும் நிலையை அடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி கருத்து

‘ஒரு மனிதன் ஒரு வாக்கு’ எனும் நிலையை நாம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நிலையிலிருந்து, ‘ஒரு மனிதன் ஒரே மதிப்பு’ எனும் நிலைக்கு நாம் செல்ல வேண்டும். அதுவே உண்மையான தேசியமாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்தார்.

சென்னையில் கடந்த சனிக் கிழமை ‘புதிய இந்தியாவுக்கான புதிய சிந்தனைகள்’ எனும் தலைப்பில் சாஸ்த்ரா பல்கலைக் கழகம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் ஆகியவை இணைந்து ஒரு கருத்தரங்கத்தை நடத்தின. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கருத்தரங் கில் சீதாராம் யெச்சூரி, மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன்தாஸ் குப்தா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத் தின் சட்ட மானுடவியல் துறை பேராசிரியரும் பத்திரிகையாளரு மான‌ எஸ்.குருமூர்த்தி மற்றும் ‘இந்து’ என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கருத்தரங்கத்தை சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் நெறிப்படுத்தினார்.

சீதாராம் யெச்சூரி பேசும்போது, “நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதரும் பொருளாதாரச் சுதந் திரத்தை அடைய வேண்டும். ‘ஒரு மனிதன் ஒரு வாக்கு’ எனும் நிலையை நாம் என்றோ அடைந்து விட்டோம். அந்த நிலையிலிருந்து ‘ஒரு மனிதன் ஒரே மதிப்பு’ எனும் நிலைக்குச் செல்ல வேண்டும். அதுவே உண்மையான தேசிய மாகும்” என்றார்.

பத்திரிகையாளர் ஸ்வபன்தாஸ் குப்தா பேசும்போது, “இன்று இந்தியாவில் எத்தனையோ வித மான சிந்தனைகள் இருக்கின்றன. அவற்றில் எதில் இந்தியத்தன்மை இருக்கிறது என்று நாம் பார்க்க வேண்டும். இந்தியா பல கலாச் சாரங்களையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிப் பரந்து விரிந்துள்ளது. இந்த விசாலத்தன்மையை அங்கீ கரிப்பதே புதிய இந்தியாவுக்கான புதிய சிந்தனை” என்றார்.

வரலாற்றை வியக்க வேண்டாம்

‘தி இந்து’ என்.ராம் பேசும்போது, “நாட்டில் ‘எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் இந்தியா’ எனும் கருத்து கற்பனாவாத கருத்து ஆகும். ‘எல்லோருக்குமான இந்தியா’ எனும் கருத்தே 1921-ம் ஆண்டு கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்தான் முதன்முதலாக தோன்றுகிறது. நான் வரலாறு கற்றவன். ‘கடந்த காலத்தை நாம் வியந்து பார்க்கத் தேவையில்லை’ என்று எங்களின் பேராசிரியர்கள் கூறுவார்கள். கடந்த காலங்களில் மதம் சார்ந்து பல விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதி லிருந்து படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வோம். மற்றபடி அவற்றை நாம் வியக்கத் தேவை யில்லை. நம் நாட்டில் அனைவரும் சமம். நாடு என்று வருகிறபோது அங்கு மதவாதத்துக்கு நிச்சயமாக இடமில்லை” என்றார்.

பேராசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசும்போது, ‘‘நமது கலாச்சாரமே நம் முன்னேற்றத்துக்கான அடிப் படை உந்துசக்தி ஆகும். நான் இந்தியா முழுவதும் ஆய்வுக்காகச் சுற்றியிருக்கிறேன். அந்தப் பயணங் களிலிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவெனில், ‘ஜாதியை விலக்கி விட்டு நம்மால் பொருளாதார மேம்பாட்டை அடைய முடியாது’ என்பதுதான். பொருளாதார முன் னேற்றம் என்று வருகிறபோது அங்கு ஜாதியம் உற்பத்தித் திறன் கொண் டது ஆகும். ஆனால் அரசியல் என்று வருகிறபோது அது மிகவும் ஆபத்தாகிவிடுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x