Published : 23 Jan 2022 07:51 AM
Last Updated : 23 Jan 2022 07:51 AM

திருப்பத்தூர் அருகே சோழர்கால கற்சிற்பங்கள் கண்டெடுப்பு: கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

திருப்பத்தூர் அருகே சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் திருப்பத்தூர் அருகே கள ஆய்வு மேற்கொண்டதில், கி.பி.10-ம் நூற் றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் சிற்பம் ஒன்றை கண்டெ டுத்துள்ளனர்.

இது குறித்து உதவி பேராசிரியர் பிரபு கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டம், குருசிலாப்பட்டு கிராமத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. அப்போது மண்ணில் புதை யுண்டிருந்த 2 கற்சிற்பங்களை அப்பகுதி மக்கள் கண்டறிந்து எங்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், எங்கள் ஆய்வுக் குழுவினர் அங்கு கள ஆய்வு மேற்கொண்டோம்.

அதில், உடைந்த நிலையில் இருந்த நடுகல் ஒன்றும் பழமையான சண்டிகேசுவரர் சிற்பமும் மண்ணில் புதைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கிடைத் திருப்பது பெருமைக்குரியதாகும்.

விசாரசருமன் என்ற இயற் பெயரைக் கொண்ட சண்டிகேசு வரர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஆவார். ஒரு முறை இடையர் குலச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதை பார்த்து கோபம் கொண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங் கினார்.

பசுக்களிடம் பாலைக் கறந்து அதனை சிவபூஜைக்குப் பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறை யிட்டார்கள். விசாரசருமர் மண் ணால் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அதனை நேரில் பார்த்த தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூஜையை தடுக்கச் சென்றார். விசாரசருமர் தவத்தில் இருந்தபோது சிவ பெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் கோபம்கொண்டு, சிவன் அபிஷேகத்துக்கு வைத்திருந்த பாலினை அவரது தந்தை எட்டி உதைத்தார்.

இதனால், கோபம் கொண்ட விசாரசருமர் தனது தந்தையை தண்டிக்கும் பொருட்டு அருகில் இருந்த குச்சியை எடுத்து வீசுகிறார். அது மழுவாக (ஆயுதம்) மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டின. இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்குச் சமர்ப்பிக்கும் அனைத்துக்கும் உரியவனாகும் (தனாதிபதி) சண்டேசுவர் என்ற பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசு வர நாயனார் என 63 நாயன்மார்களுள் ஒருவராக அழைக்கப் படுகிறார்.

இத்தனை வரலாற்று சிறப்புமிக்க செய்திகளுக்கு உரிய இச்சிற்பம் இரண்டரை அடி உயரமும், ஒன்னேகால் அடி அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இச்சிற்பம் கி.பி. 10-ம் நூற் றாண்டைச் சேர்ந்ததாகும்.

வில்வீரனின் நடுகல் இங்கு நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணியில் மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட நடுகல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த நடுகல்லானது, கீழ்ப்பகுதி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை ஒழுங்குபடுத்தி வைத்துப் பார்த்த போது ஐந்தரை அடிநீளமும், 3 அடி அகலமும் கொண்ட நடுகல்லாக உள்ளது. தலையில் உச்சியில் வாரி முடித்து கட்டிக் கொண்டை யிட்ட நிலையில் உள்ளார்.

அவரது இடது புறம் குத்து விளக்கும், கெண்டியும் காட்டப்பட்டுள்ளது. இவர் வில் வீரனாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் போரிட்டு உயிரிழந் தவராக இருக்கக்கூடும். அவரது வீரத்தினை பறைசாற்றும் விதமாக இந்நடுகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நடுகல் வழிபாட்டில் இருந்து பின்னர் கைவிடப்பட்டு மண்ணில் புதையுண்டு போனதாகும். இக்கல்லானது, கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும்.

இவ்விரு சிற்பங்களும் இங் குள்ள திரவுபதியம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வரலாற்று பின்னணியை இங்குள்ள மக்களுக்கு எடுத்துக் கூறி இவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் இதனை கவனத்தில் கொண்டு இச்சிற்பங்களை உரிய முறையில் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை யாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x