சத்தியமங்கலத்தில் கலவை கலக்கும் இயந்திர வாகனம் கவிழ்ந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கலவை கலக்கும் இயந்திரம் கவிழ்ந்து மூவர் உயிரிழந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கலவை கலக்கும் இயந்திரம் கவிழ்ந்து மூவர் உயிரிழந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
Updated on
1 min read

ஈரோடு: சத்தியமங்கலத்தில் வடிகால் அமைக்கும் பணியின்போது கலவை கலக்கும் இயந்திர வாகனம் கவிழ்ந்ததில் தொழிலாளர்கள் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பகவுண்டன் புதூர் பகுதியில் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கோணமூலை உடையார் காலனியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் கே. திதியன் (31) என்பவர் செய்து வருகிறார்.

கோணமூலை கிராமம் செல்லாண்டி அம்மன் கோயில் அருகில் இருந்து கலவை கலக்கும் இயந்திர வாகனம் கலவை கலக்கிக் கொண்டு வந்துள்ளது.

இந்த வண்டியை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி (21) என்பவர் ஓட்டி வந்தார். ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலையைச் சேர்ந்த முத்து (35), சத்தியமங்கலத்தைச் சேர்ந்த டி. சரவணன் (35) வந்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக வண்டி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் வண்டியின் அடியில் சிக்கிய மூவரும் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்ன்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in