

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் தமிழ்ப் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அக்கடிதத்தில், “உங்களுக்கு எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தமிழகத்துக்கு நல்ல சுகாதாரம், மகிழ்ச்சி, கவுரவம், வளம், செழிப்பு ஆகியவற்றை அளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதுதவிர ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதாவை நேற்று காலை தொலைபேசியில் தொடர்புகொண்டும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். ஆளுநருக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்தார்.
இத்தகவல்கள் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.