

கோவை பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று 207 மான் கொம்புகள், கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தீயிட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, ‘‘உயிரிழந்த வன விலங்குகளின் உடல் பாகங்களை யாரும், வேறு எந்தவிதத்திலும் பயன்படுத்தக் கூடாது. எனவே, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின காப்பாளரின் உத்தரவுப்படி, கோவை வனக்கோட்டத்தில் இயற்கை மரணம், நோயுற்று மரணமடைந்த யானைகளின் 33 கோரைப்பற்கள், 8 தாடைகள், புலியின் பல், ஒரு மானின் தோல், 207 மான் கொம்புகள், 13 சிறுத்தையின் நகங்கள், 2 பற்கள், 10 எலும்புகள் என மொத்தம் 274 பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன,’’ என்றார். அப்போது, உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார், வனச்சரக அலுவலர்கள், தன்னார்வ அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.