Published : 25 Apr 2016 08:16 AM
Last Updated : 25 Apr 2016 08:16 AM

நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி

பாஜக, திமுக, தேமுதிக, மதிமுக, பாமக என பல்வேறு கட்சிகளுக்கான நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதியை அளித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு 40 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு 20 பேர் என, நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போதைய தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள், தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை 29-ம் தேதிக்குள் வழங்கி, அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதன்படி, பாஜக, திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் விண்ணப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுள்ளன. பாஜக சார்பில் 39 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் கருணாநிதி, க.அன்பழகன், ஸ்டாலின் என 40 பேருக்கும், தேமுதிகவில் 40 பேருக்கும், மதிமுக, தமாகா, பாமக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 20 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x