

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும். இதில் இன்னுயிர் நீந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது கடமையாகும். தமிழுக்காக தங்கள் உயிரை ஈந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக மாணவர் அணி சர்பில் ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் வழக்கமாக நடைபெறும்.
கரோனா அதிகரிப்பதால், வரும் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட முக்கிய நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள் இணைந்து மொழிப்போர் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதையும் வீர வணக்கமும் செலுத்துவர்.