திருமண வரவேற்பின் போது மணமகனை மாற்றிய விவகாரம்: ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு போலீஸாரிடம் புகார்

திருமண வரவேற்பின் போது மணமகனை மாற்றிய விவகாரம்: ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு போலீஸாரிடம் புகார்
Updated on
1 min read

பண்ருட்டி அருகே திருமண வரவேற்பின் போது மணமகனை மாற்றிய விவகாரத்தில் ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு மகளிர் காவல் நிலைத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே கடந்த 19-ம் தேதி நடந்த திருமண வரவேற்பு ஒன்றில், மணமகள் நடனமாடினார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகன் மணமகளைத் தாக்கி னார். இதனால் அவருடனான திருமணம் நிறுத்தப்பட்டு, அதே நாளில் மணமகள் தனது முறை மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே, திருமணத் துக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை தர் என்பவர் நேற்று பண்ருட்டி அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் ஒன்றைஅளித்தார். அந்தப் புகாரில் கூறியி ருப்பதாவது:

பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் ஜெயசந்தியாவுக்கும், எனக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு, பண்ருட்டியில் உள்ளசுபாஷினி மஹாலில் நிச்சயதார்த் தம் முடிந்தது.

பண்ருட்டியை அடுத்த காடாம் புலியூரில் 20-1-2022 அன்று திருமணம் நடத்துவது என பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டது. இதையடுத்து 20-ம் தேதி திருமண நிகழ்வுக்கு முதல் நாள் இரவு காடாம்புலியூர் மண்டபத்தில் திருமண வரவேற்பில் மணமக ளின் உறவினர்கள் ஆடல் பாடல்நிகழ்வை நடத்தி, ஆடிக்கொண் டிருந்தனர்.

அப்போது என்னையும், ஜெய சிந்தியாவையும் அழைத்து ஆடு மாறு வற்புறுத்தினர். நான் மறுத்து விட்டேன். ஜெயசிந்தியா ஆடினார். அதன் பின், ‘மற்றவர்களோடு ஏன் ஆடுகிறாய்!’ என ஜெயசிந் தியாவிடம் கேட்டேன். அதற்கு அவர், அப்படித்தான் ஆடுவேன் என்றார்.

உடன் அவரது பெற்றோர் உள்ளிட்ட சிலர் என்னையும் குடும்பத்தாரையும் மிரட்டித் தாக்கி னர். மணப் பெண்ணுக்கு விருப்ப மில்லாமல் வேறொரு திருமணம் செய்து வைத்தனர். இதனால் நானும், எனது குடும்பத்தாரும் மனவேதனை அடைந்தோம்.

மேலும் நிச்சயதார்த்தம் முதல் திருமண நிகழ்வு வரை ரூ.7 லட்சம் வரை செலவாகியுள்ளது. எனவே வெங்கடேசன் குடும்பத்தினரை அழைத்து, விசாரணை நடத்தி, நான் செலவு செய்த பணத்தை திரும்பப் பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in