

சென்னையைச் சேர்ந்த பிஆர்எல்.ராஜா வெங்கடேசன் உயர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் காலி யாக உள்ள சுற்றுச்சூழல் பிரிவு உதவிப் பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றேன். ஆனால் எனக்கு தகுதியில்லை எனக் கூறி என்னை நிராகரித்துள்ளனர். எனவே என்னை உதவிப் பேராசிரியராக பணியமர்த்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘‘மற்ற துறைகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதுபோலவே, இந்த மனுதாரரும் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் இதை மறுத்துள்ள பல்கலைக்கழகம், தேர்வு கமிட்டி மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் மூலமாக மட்டுமே மற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், இதுகுறித்த அறிவிப்பாணை வெளியிட்டபோதும் நேர்முகத் தேர்வு நடந்தபோதும்கூட தேர்வு கமிட்டி பரிந்துரைகளின்படி பல்க லைக்கழக சிண்டிகேட் எடுக்கும் முடிவே இறுதியானது என தெளி வாக கூறியிருப்பதாக கூறப்பட் டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பிரிவில் தற்போது கவுரவ விரிவுரை யாளர்கள் இருப்பதாகவும், அதனால் தேவைப்படும்போது உதவிப் பேராசிரியர் பணியிடம் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் சட்டத்துக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மனுதாரரான ராஜாவெங்கடேசன் அதிகபட்சமாக நாற்பத்து ஆறரை மதிப்பெண் பெற்றும் அவரை தேர்வு செய்யவில்லை. ஆனால் இதேபோல் வணிக சட்டம், சர்வதேச சட்டம் மற்றும் அறிவு சார் சொத்துரிமை சட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு சட்டப் பல்கலைக் கழகத்தை நடத்திக்கொண்டிருக் கிறோம் என ஒரு பல்கலைக் கழகமே பதில் மனுவில் கூறியிருப் பது ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல. அப்புறம் எதற்காக நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும். பல்கலைக்கழகம் நிரந்தர பேராசி ரியர்களை நியமித்து நன் முறையில் பாடம் நடத்தினால் தான் மற்ற கல்வி நிலையங்கள் சிறக்கும்.
நேர்முகத்தேர்வில் முறையாக பல்வேறு மதிப்பீடு செய்தே மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற துறைகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்தது போல சுற்றுச்சூழல் சட்டத்துக்கு மட்டும் ஏன் மனுதாரரை தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் 4 வாரங்களுக்குள், தகுதியான நபர்களை தேர்வுக் குழுவில் நியமித்து, ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வை மறுபரிசீலனை செய்து அதிக மதிப்பெண் பெற்ற மனுதாரருக்கு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.