சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சமாஜ்வாடி கட்சி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இதன்படி 36 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேடட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது.

சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் இளங்கோ யாதவ் நேற்று சிதம் பரத்தில் வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 50 இடங்களில் தனித்து போட்டி யிடுவது என அதன் ஒரு பகுதியாக தற்போது 36 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 தினங்களில் மற்ற 14 வேட் பாளர்களை அறிவிப்போம். வேட் பாளர்கள் அறிமுக கூட்டம் வரும் 8-ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது. இதில் சமாஜ்வாடி தேசிய துணைத்தலைவர் கிரன்மை நந்தா எம்பி, தேசிய செயலாளர்கள் ஆண்டனி, ராஜேஷ் தீட்சித் ஆகியோர் பேசுகின்றனர்.

வருகிற மே 11, 12 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மற் றும் மதுரையில் நடைபெறும் தேர் தல் பொதுக்கூட்டத்தில் தேசிய தலை வர்கள் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் வேட் பாளர்களை ஆதரித்து பேசு கின்றனர். இந்தமுறை சமாஜ் வாடி சார்பில் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறோம். இவ்வாறு இளங்கோ யாதவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in