Published : 21 Jan 2022 10:25 PM
Last Updated : 21 Jan 2022 10:25 PM

இலங்கையில் விசைப்படகு, நாட்டுப்படகுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீடு: முதல்வர் அறிவிப்பு

இலங்கை அரசிடம் படகுகளை இழந்த 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்,

1. இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்.

2. கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும்.

3. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முதல்வரிடம் வலியுறுத்தினர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறினார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி.,யை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று - தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன், மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x