

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்க்கும் வேலையை அரசுப் பணியாக மாற்றுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், மானாமதுரை (தனி) தொகுதி வேட்பாளர் சத்யாவை ஆதரித்து நேற்று வாரச்சந்தையில் நடந்த பிரச் சாரத்தின்போது சீமான் பேசிய தாவது:
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண்மைக்கு முன் னுரிமை அளிக்கப்படும். ஆடு, மாடு மேய்க்கும் வேலையை அரசுப் பணி ஆக்குவோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறி ஓட்டுப்போட்டு தமிழக மக்கள் ஏமாந்து போயுள்ளனர். இரு கட்சிகளும் மக்களை ஓட் டுப்போடும் கருவியாக மட்டுமே ஆக்கி வைத்துள்ளனர்.
தமிழர்களின் உரிமை கச்சத்தீவு. அதை தாரை வார்த்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது மீட்போம் என்கிறார். ஏற்கெனவே கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு பதில் சொல்லாத கருணாநிதி, தற்போது மீட் போம் என தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார். தேர்தல் வந்தால் மட்டுமே கச்சத்தீவு பற்றிய அக்கறை திராவிடக் கட்சிகளுக்கு வருகிறது. கருணாநிதிக்கு சொந்தமாக 6 மதுபான தொழிற்சாலைகளும், ஜெயலலிதாவுக்கு சொந்தமாக 4 மதுபான தொழிற் சாலைகளும் உள்ளன. முதலில் இதை மூடுவ தற்கு அவர்கள் முன்வரட்டும். பின்னர், மதுவிலக்கு பற்றி பேசட்டும். நமது பாரம் பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு மீதான தடையை நீக்கி கொண்டு வருவோம். நமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்த கண்மாய்கள், ஊருணி களை தூர்வாரி நீர்நிலை களைக் காப்போம். எனவே, தமிழர்களின் பாரம்பரியத்தை யும், பெருமையையும் காக்க நாம் தமிழர் கட்சியை ஆட்சியில் அமரவையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.