

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு (இஎஸ்எல்சி) ஏப்ரல் 18-ம் தேதி தொடங்குகிறது.
இத்தேர்வுக்கு அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக் கப்பட்ட நாட்களில் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அனுமதிச்சீட்டு
பதிவிறக்கம் செய்வதற்கு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படாது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித் துள்ளார்.