திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் பண மோசடி?- காளைகளுடன் உரிமையாளர்கள் போராட்டம்: லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த காவல் துறையினர்
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் மோசடி நடப்பதாக கூறி காளைகளின் உரிமையாளர்கள் விழாக்குழு வினரை முற்றுகையிட்டு நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தால் சலசலப்பு ஏற்பட்டது. இதை யடுத்து, அங்கு வந்த காவல் துறை யினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கனுார் ஊராட்சியில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. ஜோலார்பேட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். ஜோலார் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜி எருது விடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில், 350-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை கால்நடை பராமரிப் புத்துறையினர் பரிசோதனை செய்தனர். சுமார் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மக்கள் விழாவை காண வந்திருந்தனர். இதையொட்டி, திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இப்போட்டியில் 300 காளைகள் கலந்து கொண்டு ஓட விழா குழுவினர் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், போட்டியின் நேரம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து விழாவை நிறுத்துமாறு காவல் துறையினர் உத்தரவிட்டனர். அதன்பேரில், விழாக்குழுவினர் முதல் பரிசாக ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.60 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம் என 30 வகையான பரிசுகளை அறிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போட்டியில் கலந்து கொள்ளாத காளையின் உரிமையாளர்கள் விழாக் குழுவினர் 300 காளைகள் கலந்து கொள்ள அனுமதி வழங்கிவிட்டு தற்போது 230 காளைகள் மட்டுமே ஓடிய நிலையில் மற்ற காளைகள் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே பரிசுகளை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது எனவும், விழா குழுவினர் போட்டியில் கலந்து கொள்ளும் காளையின் உரிமையாளர்களிடம் டெபாசிட் பணத்தை வாங்கி விட்டு அதை முறைகேடு செய்ததாக கூறி திடீரென முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
‘இதுகுறித்து காளையின் உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘எருது விடும் விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு காளையின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2,500 டெபாசிட் பணம் பெற் றுள்ளனர். ஆனால், 70 காளைகள் ஓடாத நிலையில் அவை தோல்வி யடைந்ததாக கூறுகின்றனர்.
மேலும், நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர முடியாது எனக்கூறி முறைகேட்டில் ஈடுபட் டுள்ளனர்’’ என்றனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதைத்தொடர்ந்து, போட்டியில் கலந்து கொள்ளாத காளையின் உரிமையாளர்கள் கட்டிய பணத்தை திரும்ப பெறாமல் அங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி விழாகுழுவின் தலைவர் சிகாமணியின் வீட்டு முன்பாக காளைகளை நிறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி, டெபாசிட் பணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
