

பள்ளி மாணவ, மாணவிகளை வற்புறுத்தி கழிவறையை கழுவ வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் அருகே இடுவாய் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை நேற்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் அருகே உள்ள இடுவாய்அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45)என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மாணவ, மாணவிகளைதரக்குறைவாகவும், சாதிப்பெயரைகுறிப்பிட்டு பேசியதாகவும்,பள்ளியில் உள்ள கழிவறைகளைஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களைக் கொண்டு கழுவ வைத்ததாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷூக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கீதாவின் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆதிதிராவிடர் நலத்துறையின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் சரவணக்குமார், மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் கீதா தரப்பில்மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற அறிவுரைப்படி, இது தொடர்பான மனுவை, திருப்பூர் மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் நீதிபதிசொர்ணம் நடராஜன் நேற்று விசாரித்தார்.
அப்போது, கீதாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது எனஅரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணைக் காக திருப்பூர் மாவட்ட நீதிமன்றத் துக்கு வந்திருந்த கீதாவை,நீதிமன்ற வளாகத்திலேயே மங்கலம்போலீஸார் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் கீதா அடைக்கப்பட்டார்.