Published : 01 Apr 2016 08:24 AM
Last Updated : 01 Apr 2016 08:24 AM

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் ‘வாக்காளர் வாய்ஸ்’ மாணவர் திருவிழா: குடியாத்தத்தில் இன்று நடைபெறுகிறது

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில், முதல் முறை வாக்காளர்களுக்கான ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழா குடியாத்தம் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரப் பாடல் குறுந்தகடு வெளியிடப்பட உள் ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முதல்முறை யாக வாக்களிக்க உள்ள கல் லூரி மாணவர்கள், வாக்களிப்ப தன் அவசியம் குறித்து விளக்க ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாண வர் திருவிழா நடத்தப்படுகிறது.

தேர்தல் ஜனநாயகத்தின் பெரு மையைப் பேசும் இந்த மாணவர் திருவிழா, குடியாத்தம் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல் லூரியுடன் இணைந்து நடத்தப் படுகிறது.

கே.எம்.ஜி கலை மற்றும் அறிவி யல் கல்லூரி அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் விழாவில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் கி.பார்த்திப ராஜா, ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரி யர் சமஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், கவிஞர் அண் ணாமலை எழுதி, தாஜ்நூர் இசை அமைப்பில் உருவான வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலை tamil.thehindu.com இணையதளத் தில் கேட்கலாம் மற்றும் பதிவிறக் கம் செய்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும் ஒளிபரப்பப்படும். தொடர்ந்து, நாடகக் கலைஞர்கள் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பங்கேற்கும் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் நடைபெறும்.

கல்லூரி வளாகத்தில், வரு வாய்த் துறையினர் சார்பில் ‘மாதிரி வாக்குச்சாவடி’ அமைக்கப்பட உள்ளது.

முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்கள் வாக்குச்சாவடி யில் தங்களது வாக்குகளை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வருவாய்த் துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x