ஆம்பூர் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த அரசு பள்ளி மாணவர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே மேம்பாலத்தில் இருந்து விழுந்த அரசு பள்ளி மாணவர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஆம்பூர் அருகே தடுப்புச் சுவர் மீது மோதி மேம்பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வீராண மலை மாதகடப்பா பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சந்தோஷ்குமார். இவரது மகன் காந்த் (13). இவர், அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ராமாயிலு மகன் திலீப்குமாருடன் (14) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு வந்துக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவர் மீது மோதி மேம்பாலத்தில் இருந்து காந்த் தவறி விழுந்தார். இதில், காந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீப்குமார் படுகாயமடைந்தார். இந்த தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் அங்கு வந்து காயமடைந்த திலீப்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in