Published : 23 Apr 2016 10:43 AM
Last Updated : 23 Apr 2016 10:43 AM

‘தி இந்து’ - ‘பொதிகை’ இணைந்து வழங்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர்: 32-வது வாரமாக தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பு

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் இசை வாழ்க்கையை பிரதி பலிக்கும் வண்ணம் ‘குறையொன்று மில்லை’ என்ற நெடுந்தொடர் பொதிகை தொலைக்காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30க்கு ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராமபிரான் மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய அபூர்வமான பக்திப் பாடல்களின் தொகுப்பு ஒளிபரப்பானது.

இதையடுத்து 32-வது அத்தியாய மாக இந்த வாரம் எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் இசைப்பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்திய ‘மீரா’ படத்தின் பாடல்களின் தொகுப்பு இடம்பெற உள்ளது. குறிப்பாக, இந்த தலைமுறை அதிகம் கேட்டி ராத, பார்த்திராத பாடல்கள் இடம் பெறும். அதோடு எம்.எஸ்,சுப்பு லட்சுமியைப் பற்றி அரிய பல தகவல்களையும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் தர உள்ள னர்.

இந்த நெடுந்தொடரில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அரிய புகைப் படங்களும் இடம்பெறு கின்றன. சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x