Published : 19 Jan 2022 03:48 PM
Last Updated : 19 Jan 2022 03:48 PM

புதுச்சேரியில் 1,849 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 3 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப்படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 1,849 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார் இன்று (ஜன.19) வெளியிட்ட தகவலில், ''புதுச்சேரி மாநிலத்தில் 6,116 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 1,316, காரைக்கால்- 447, ஏனாம்- 58, மாஹே- 28 என மொத்தம் 1,849 பேருக்கு (30.23 சதவீதம்) கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 559 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஜிப்மரில் 45 பேரும், அரசு மார்பு நோய் மருத்துவமனையில் 34 பேரும் என 79 பேர் புதுச்சேரியிலும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 6 பேரும், மாஹேவில் 11 பேரும் என 127 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 11,217 பேர் என மொத்தமாக 11 ஆயிரத்து 344 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 895 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 319 (90.71 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என முதல் டோஸ் 9 லட்சத்து 12 ஆயிரத்து 66 பேருக்கும், 2-வது டோஸ் 5 லட்சத்து 92 ஆயிரத்து 743 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 3,481 பேருக்கும் என மொத்தம் 15 லட்சத்து 6 ஆயிரத்து 290 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x