

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான தேதி குறித்து அரசு தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துவிட்டதாக தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை யானைகவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழக அரசு தேர்தலை நடத்த தயார், தேர்தல் ஆணையத்துக்கு தேதியெல்லாம் கொடுத்துவிட்டோம். இனி தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் தெரிவிக்க வேண்டும். அரசு தரப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.