நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளும் கணிசமாக பெண்களுக்கு ஒதுக்கீடு

நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளும் கணிசமாக பெண்களுக்கு ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சிகளை தொடர்ந்து, நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலைவர் பதவியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வார்டு வரையறை பணிகள் முடிந்து, தற்போது இட ஒதுக்கீடு தொடர்பான பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 138 நகராட்சிகளை பொருத்தவரை, கொடைக்கானல், தாராபுரம், நாமக்கல்,மானாமதுரை, நரசிங்கபுரம், புஞ்சை புளியம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை, துறையூர், களக்காடு, மாங்காடு, புளியங்குடி, கூடலூர், மேட்டூர், திருப்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய 10 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி பழங்குடியின பெண்களுக்கும், ராணிப்பேட்டை, கூத்தாநல்லூர், குன்னூர், அரக்கோணம், ஆத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், சோளிங்கர், உசிலம்பட்டி உள்ளிட்ட 58 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் பொதுப் பிரிவுபெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, சோளூர், தேவர்சோலா பேரூராட்சி தலைவர் பதவிகள் பழங்குடியின பெண்களுக்கும், கிள்ளை பேரூராட்சி பழங்குடியினர் பொதுப் பிரிவினருக்கும், தேசூர், மருதூர், புலியூர், வாலாஜாபாத், அச்சிறுப்பாக்கம், பூலம்பாடி, வீரபாண்டி உள்ளிட்ட 43 பேரூராட்சி தலைவர் பதவிகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், ஆரணி,நாரவாரிக்குப்பம், அவிநாசி, வல்லம் உள்ளிட்ட 200 பேரூராட்சிகள் பொதுப் பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 16 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுப் பிரிவினருக்கும், 16 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும், மேலும் 84 வார்டுகள் பொதுப் பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 200-ல் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in