Published : 17 Apr 2016 09:15 AM
Last Updated : 17 Apr 2016 09:15 AM

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிஎஸ்என்எல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த பிஎஸ்என்எல் ஊழியரின் இதயம், கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

சென்னை கிண்டியை சேர்ந்தவர் எல்.மோகன் (55). பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கு தேவகி என்ற மனைவி, 8 வயதில் மகள் உள்ளனர். மோகன் கடந்த 12-ம் தேதி இரவு பைக்கில் வேளச்சேரிக்கு சென்றுகொண்டிருந்தார். வேளச் சேரி மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. தலையில் பலத்த காயம் அடைந்த மோகனை அருகே இருந்தவர்கள் மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத் துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மோகன் மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மனைவி தேவகி தெரிவித்தார். டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து மோகனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், கண்களை அகற்றினர்.

கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகி யவை சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறு நீரகம் அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவருக் கும், இதயம் ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிக்கும் பொருத் தப்பட்டது. அகர்வால் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு அவரது கண்கள் பொருத்தப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த பிஎஸ்என்எல் ஊழியரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x