Published : 26 Apr 2016 08:20 AM
Last Updated : 26 Apr 2016 08:20 AM

பாஜக வேட்பாளர் கே.டி.ராகவனுக்கு ரூ. 1.24 கோடி சொத்து

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.டி.ராகவன் தனக்கு ரூ. 1 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 532 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கே.டி.ராகவனிடம் ரூ. 4 லட்சத்து 37 ஆயிரத்து 137, மனைவி யிடம் ரூ. 8 லட்சத்து 93 ஆயிரத்து 395 என மொத்தம் ரூ. 13 லட்சத்து 30 ஆயிரத்து 532 மதிப்புள்ள அசை யும் சொத்துகள் உள்ளன. கே.டி.ராகவன் பெயரில் ரூ. 81 லட்சத்து 50 ஆயிரம், மனைவி பெயரில் ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

மொத்தம் ரூ. 1 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 532 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x