Last Updated : 26 Apr, 2016 08:56 AM

 

Published : 26 Apr 2016 08:56 AM
Last Updated : 26 Apr 2016 08:56 AM

அப்பல்லாம் இப்படித்தான்! - சைக்கிளில்தான் தெருக்களில் பிரச்சாரம்: நினைவுகளை பகிரும் முன்னாள் எம்எல்ஏ

திண்டிவனம் அருகே நீர்பெருத்த கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சகாதேவன்(82) 1971-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அவர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

1971-ம் ஆண்டு பேரவைத் தேர்தலுடன், நாடாளுமன்ற தேர் தலும் நடந்தது. திமுகவும், இந்திரா காங்கிரஸும் கூட்டணி. நான் திமுக சார்பில் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து ஸ்தாபன காங்கிரஸைச் சேர்ந்த பெருமாள் நயி னார் போட்டியிட்டார். என்னை ஆத ரித்து இந்திராகாந்தியும், எம்ஜிஆரும் ஒரேநாளில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. பின்னர் முதலில் இந்திரா காந்தி பிரச்சாரம் செய்தார். அதே மேடையில் 2 நாட்களுக்குப் பிறகு எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார்.

கிராமங்களில் ஓட்டு கேட்க சைக்கிளில்தான் செல்வோம். கிராமங்களில் உள்ள கட்சிக்காரர் கள் வீட்டில் சாப்பாடு. இரவு ஏதா வது ஒரு கிராமத்தில் பிரச்சாரம் முடிந்ததும் அங்கேயே தங்கி, மறுநாள் பிரச்சாரத்தை தொடங்கு வோம். கட்சிக்காரர்கள் உணர் வோடு, தங்கள் பணத்தை செலவிட்டு தேர்தல் பணியாற்றி னார்கள். 12,772 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அப்போது தேர்தல் செலவே ரூ.1 லட்சத்துக்குள்தான் ஆனது. எனக்கு பின்பே செஞ்சி ராமசந்திரன் அரசியலுக்கு வந்தார்.

நான் இப்போது அதிமுகவில் உள் ளேன். இப்போதுகூட மயிலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அண்ணாதுரைக்காக வாக்கு சேகரிக்க கிளம்புகிறேன் என்றவாறு புறப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x