Published : 17 Jan 2022 09:48 AM
Last Updated : 17 Jan 2022 09:48 AM

வேலூர் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் துணை வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்தி ரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் ‘உழவன் செயலியில்’ பதிவு செய்ய வேண்டும்.

பிறகு அவருடைய விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவ னங்கள் தங்கள் சுய விருப் பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

இணையதளத்தில் பதிவு

நடப்பு ஆண்டில் முதல் தவணையாக வேலூர் மாவட்டத்துக்கு ரூ.29 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 36 இயந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் இறுதிக்குள் இதன் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். விவசாயிகள் இயந்திர சுருவியை தேர்வு செய்தால் அவர்கள் 1,2,3 என எண் இடப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப் படையில் ஏற்றுக் கொள்ளப் படாது. எனவே, 2021-2022 ஆண்டுக்கு புதிதாக பதிவு செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும் ஏதாவது 2 வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அதே வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும்.

விவசாயிகள் பயன்பெறலாம்

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ள விவசாயிகள் வேலூர் மாவட்டம், தொரப்பாடி, தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரேயுள்ள, வேளாண்மை செயற் பொறியாளர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x