Published : 16 Jan 2022 08:37 AM
Last Updated : 16 Jan 2022 08:37 AM

கேரளாவில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடல்

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 2 வாரத்துக்கு மூடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி நேற்று கூறியதாவது: மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து 1 முதல் 9 வரையிலான பள்ளிகளை 2 வாரங்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தப்படும். இது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

10 முதல் 12 வரையிலான மாணவர்கள் கரோனா விதிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிக்கு வரலாம். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. அது திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x