

திமுக கூட்டணியில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் எருக்கஞ்சேரியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவோடு அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கும், மனைவிக்கும் சேர்த்து ரூ.86 லட்சத்து 95 ஆயிரத்து 694 மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.17 கோடியே 56 லட்சத்து 91 ஆயிரத்து 868 மதிப்புள்ள அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.18 கோடியே 43 லட்சத்து 87 ஆயிர்து 562 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.