குஷ்புவை கண்டித்து திருநங்கைகள் திடீர் போராட்டம்

குஷ்புவை கண்டித்து திருநங்கைகள் திடீர் போராட்டம்
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்புவை கண்டித்து நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு திருநங்கைகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் திருநங் கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சில கருத்துகளை கூறியி ருந்தார். இந்த கருத்து திருநங் கைகள் மனதை புண்படுத்தியதாகக் கூறி அவர்களில் பலர் எதிர் கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்தியன் டிரான்ஸ்ஜெண்டர் இனிசியேட்டிவ் அமைப்பின் தலைவர் திருநங்கை சுதா, சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் பலர் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கை சுதா செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நாங்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இப்படி கருத்து தெரிவிக்க அவருக்கு உரிமை இல்லை. வருடத் துக்கு ஒருமுறை கட்சி மாறக் கூடிய இயல்பு கொண்ட, வேற்று மாநில பெண்ணான நடிகை குஷ்பு கடினமான போராட்டங்களைச் சந்தித்து முன்னேறிக் கொண்டி ருக்கும் எங்களை தரக்குறைவாக விமர்சிப்பது நல்லதல்ல. அவர் அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக உயர்ந்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக ஆனாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தனது கருத்துகளை குஷ்பு திரும்பப் பெற வேண்டும். திருநங்கைகள் குறித்து தவறாக பேசிவரும் அவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அனைவரும் அங்கி ருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரன், தோழி, சிநேகிதி, டி.ஆர்.ஏ, ஐ.டி.ஐ. ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

குஷ்பு பதில்

இந்த சம்பவம் குறித்து குஷ்பு விடம் கேட்டபோது, ‘இந்த சம்ப வத்தை பெரிதுபடுத்த வேண்டாம். இது தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in