

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு எதிரொலியாக மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கலை பண்டிகையையொட்டி மாட்டுப் பொங்கல் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலன்று பெரும்பாலானோர் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். மாட்டுப் பொங்கலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (இன்று) முழு ஊரடங்கு என்பதால் பெரும்பாலானோர் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் இறைச்சி மற்றும் மீன் வாங்க நேற்று அதிக அளவில் கூடினர்.
இதனைத் தொடர்ந்து வழக்கமாக கிலோ ரூ.500-க்கு விற்கப்படும் வஞ்சரம் மீன் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஷீலா, சங்கரா மீன்கள் ரூ.250-க்கு பதில்ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் இருந்தது.