

விருதாச்சலம் அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் நான்கு பேர் இறப்புக்கு ஜெயலலிதா தான் காரணம். அவர் என்ன லேடி ஹிட்லரா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
துறைமுகம் தொகுதியில் மதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து வைகோ பேசியதாவது:
''சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. 2ஜி வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு பயம் காராணமாக திமுக, அதிமுக கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து எதுவும் கேட்பதில்லை.
அதிமுக மீது கொடுக்கப்படும் புகார்கள் மீது தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக சிறுதாவூர் கன்டெய்னர் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
விருதாச்சலம் அதிமுக பிரச்சார கூட்டத்தில் 4 பேர் இறந்தனர். அதற்கு ஜெயலலிதா தான் காரணம். அவர் என்ன லேடி இடி அமீனா? லேடி ஹிட்லரா? லேடி முசோலினியா?'' என்று வைகோ பேசினார்.