Published : 16 Jan 2022 09:15 AM
Last Updated : 16 Jan 2022 09:15 AM

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியும் ஊக்கத் தொகை வழங்கவில்லை. இதைத் கண்டித்தும், அரசு மருத்து வக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் போலத் தங்களுக் கும் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் சுமார் 75 பேர் கடந்த14-ந் தேதி முதல் காலவரையற்ற போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று(15ம் தேதி) 2- வது நாளாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர் கள் கூறுகையில், "மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாதாந் திர உதவித்தொகை ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு கடந்த 25 வருடத்திற்கு முன் வழங்கிய ரூ. 3 ஆயிரத்தை மட்டும் இன்னும்வழங்குகிறார்கள். அதையும் கடந்த 8 மாதமாக வழங்கவில்லை. மேலும் அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்களைப்போலவே கரோனோ பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சுமார் 45 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும், மக்களின் நலன் கருதி பணியாற்றி வருகிறோம்.

ஊக்கத் தொகைகுறித்து அரசுக் குப் பலமுறை கடிதம் மற்றும் போராட்டம்மூலம் தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை. அத னால் தமிழக முதல் அமைச்சர் உடனடியாகத் தலையிட்டுப் பயிற்சிமருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை மற்ற அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப் போல வழங்க உத்தரவிட வேண் டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x