பணகுடி அருகே நடைபெற்ற போட்டியில் 65 கிலோ இளவட்டக் கல் தூக்கி திருமணமான பெண் அசத்தல்

65 கிலோ இளவட்டக்கல்லை அநாயசமாக தூக்கி சாகசம் புரிந்த ராஜகுமாரி.
65 கிலோ இளவட்டக்கல்லை அநாயசமாக தூக்கி சாகசம் புரிந்த ராஜகுமாரி.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலி விளை கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி இளவட் டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் இளைஞர்களும், இளம்பெண்களும், திருமணமான ஆண்களும், பெண்களும் பங்கேற்று தங்கள்திறமையை வெளிப்படுத்தினர். 50 கிலோ உரலை ஒரு கையில் அதிக நேரம் பிடித்த இளைஞர் அஜய் (21) முதல் பரிசும், பாலகிருஷ்ணன் 2- ம் பரிசும் பெற்றனர்.

65 கிலோ இளவட்டக் கல்லை தூக்கி 10 முறை கழுத்தை சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய மணமான பெண் ராஜகுமாரி (35) முதல் பரிசும், பத்மா 4 முறை சுற்றி 2- ம் பரிசும் பெற்றனர். 114 கிலோ எடையுள்ள இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் தங்கராஜ் முதல் பரிசும் , அஜய் 2-ம் பரிசும் பெற்றனர்.

129 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை 4 -வது முறையாக தங்கராஜ் என்பவர் மட்டுமே தூக்கி முதல் பரிசை தட்டி சென்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வலிங்கம், செழியன், மூர்த்தி, முத்துக்குமார், திரவியம், சுந்தர், விவேக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in