Published : 15 Jan 2022 06:07 PM
Last Updated : 15 Jan 2022 06:07 PM

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு: 3-வது ஆண்டாக முதல் பரிசை வென்ற பிரபாகரன்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவுபெற்றன. பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசை தட்டிச் சென்றார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்தப் போட்டியின்போது இரண்டு காவலர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். முறைகேடாக போட்டிகளில் பங்கேற்ற இரண்டு மாடுபிடி வீரர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதில் மதுரை மாவட்டம் பொதும்பை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 7 சுற்றுகளின் முடிவில் 21 மாடுகளைப் பிடித்து முதலிடம் பிடித்தார். ஓட்டுநரான இவர் கடந்த 2020, 2021 மற்றும் 2022 என தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த கார்த்திக் ராஜா என்பவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த சூறாவளி மாட்டின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.மதுரை மேலமடை பிரகாஷ் என்பவரது மாட்டுக்கு இரண்டாவது பரிசாக நாட்டு மாடு வழங்கப்பட்டது.

அரசு வேலை வழங்க வேண்டும்: முதல் பரிசு வென்ற மாடுபிடி பிரபாகரன் கூறியது: "தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் பரிசு வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் களத்தில் இறங்கிய நண்பர்கள் பலரும் நான் பிடிக்க வேண்டும் என்று உறுதுணையாக இருந்து என்னை உற்சாகப்படுத்தியது சந்தோஷமாக இருந்தது. போட்டி கடுமையாகத்தான் இருந்தது. காரணம் சென்ற முறை, அவனியாபுரத்தில் மாடு பங்கேற்றிருந்தாலும், பாலமேட்டிலும் கலந்துகொள்ள செய்வார்கள். அப்படி வரும் மாடுகள் சோர்வடைந்திருக்கும் அதனை அடக்குவது எளிதாக இருக்கும். ஆனால் இந்த முறை மாடுகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ததால், மாடுகள் பிரிக்கப்பட்டு விட்டன இதனால் களத்தில் வந்த மாடுகளை அடக்குவது கடுமையாக இருந்தது. ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.

தவறவிடாதீர்:

> அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகளும் காளையர்களும் தெறிக்கவிட்ட தருணங்கள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

> பாலமேடு ஜல்லிக்கட்டு பரபர தருணங்கள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x