Published : 15 Jan 2022 01:14 PM
Last Updated : 15 Jan 2022 01:14 PM

திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது "திருக்குறள் ஓவியக்கால பேழை" என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட குறளோவிம் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற 7 மாணவர்களுக்கு பரிசுத் தொகையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பேத்தியும், 8 வயது மாணவியுமான மகிழினி எழுதிய "அட்வெஞ்சர்ஸ் ஆஃப் சிங் ஷேங் இன் மிஸ்ட்ரி ஐலேன்ட்" (The Adventures of Shing and Shang in Mystery Island) என்ற புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ,நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x