

புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், 2022-23-ம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தேசப் பட்டியலை புதுச்சேரிமின்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 0 முதல் 100 வரையூனிட் வரை ரூ.1.55-ல் இருந்துரூ.1.90 ஆக உயர்த்தப்பட்டுஉள்ளது. 101 முதல் 200 வரையூனிட் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.2.60-ல் இருந்து15 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.75 ஆக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 300வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கும், 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கும், குடிசைக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகக் கட்டணத்திலும் மாற்றமில்லை. சிறு விவசாயிகள் மாத நிரந்தரக் கட்டணமாக ரூ.11 செலுத்தி வரும்நிலையில், அவை ரூ.20 ஆகவும்,மற்ற விவசாயிகள் ரூ.50 செலுத்தும் நிலையில் ரூ.25 அதிகரித்து ரூ.75 ஆகவும் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. தற்காலிக மின் இணைப்புச் சார்ந்த நிரந்தர மின் இணைப்பின் நிலை கட்டணம் மற்றும் மின் உபயோக கட்டணத்தைபோல் 1.5 மடங்குகூடுதலாக வசூலிக்கப்படும். பன்முக பயன்பாட்டுக்கான தற்காலிக மின் இணைப்புக்கு வீட்டு உபயோகமில்லாததற்கான மின்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்த தொழிலகத்துக்கான (எச்டி) மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.30-ல் இருந்து 5 காசுகள், வர்த்தகங்களுக்கு ரூ.5.45-ல் இருந்து 5 காசுகளும் அதிகரித்துள்ளன. தண்ணீர் தொட்டி உயர் அழுத்தம் மற்றும்உயர் அழுத்தம், 110 கேவி மிக உயர் அழுத்தம் மின்கட்டணம் யூனிட்டுக்கு தலா 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. ஏப். 1-ம்தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.