

சென்னை மாவட்டத்தின் துணை வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கு கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்பவர், ஏதேனும் ஒரு தொகுதி யில் வாக்காளராக இருக்க வேண்டும். வேட்புமனுவை முன்மொழிபவர்கள், சம்பந் தப்பட்ட தொகுதியில் வாக் காளர்களாக இருக்க வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகும், வேட்பாளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க் கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இதன் முதல் துணை வாக்காளர் பட்டியல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளி யிடப்படும் என்றார்.