தமிழகத்தில் அடுத்த 2 நாள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாள் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

14, 15-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 16, 17-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு சென்னை வானிலைஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in