Published : 14 Jan 2022 07:04 AM
Last Updated : 14 Jan 2022 07:04 AM

புதுச்சேரி ரேஷன் கடைகளுக்கு இதுவரை வராத அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள்: தீபாவளி இலவச அரிசியும் தராததால் மக்கள் அதிருப்தி

இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் சூழலில், புதுச் சேரியில் ரேஷன் கடைகளுக்கு இதுவரை அரசின் பொங்கல் பரிசுப் பொருட்கள் வரவில்லை. தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசியும் முழுமையாக அனைவருக்கும் தரப்படாமல் உள் ளதால் மக்கள் ஆதங்கத்துடன் உள்ளனர். தாமதம் தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

“புதுவை அரசின் சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல் லம், பச்சைப்பயிறு, உளுந்து உட்பட ரூ. 490 மதிப்பிலான 10 பொருடங்கள் அனைத்து குடும்பத்துக்கும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்” என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். கதிர்காமம் தொகுதியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியையும் முதல்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி யில் உள்ள அனைத்து ரேஷன் கடை களிலும் பொங்கலுக்குள் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரையிலும் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளுக்கு வந்து சேர வில்லை. பொதுமக்கள் ரேஷன் கடைகளை அணுகி, ‘பொருட்கள் வந்துள்ளதா!’ என்று கேட்டு விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

"தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதிலும் 2 கிலோ சர்க்கரை மட்டுமே ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ அரிசி இது வரையிலும் வழங்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இலவசப் பொருட்கள் தருவதாக தெரி வித்தார்கள். அதையும் தரவில்லை. ஒரு சில தொகுதிகளில் மட்டும் தருவதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், அங்குள்ளவர்களிடம் விசாரித்தாலும் ‘வாங்கவில்லை’ என்றுதான் பதில் வருகிறது. எங்குதான் தருகிறார்கள் என்பதேதெரியவில்லை. வழக்கம்போல் எதிர்க்கட்சியினர் மவுனம் காக்கின் றன." என்று மக்கள் ஆதங்கத்துடன் பேசிக் கொள்கின்றனர்.

அமைச்சர் விளக்கம்

இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணன் குமாரிடம் கேட்டதற்கு, "தீபாவளிக்கு தருவதாக டெண்டர் எடுத்தோர் தந்த அரிசி தரமாக இல்லை. அதனால் திருப்பி அனுப்பி விட்டோம். தரமான அரிசியைதான் விநியோகிப்போம். அதேபோல் பொங்கல் பரிசுப் பொருட்கள் தருவதற்கான டெண்டர் இறுதி செய்து,பொருட்கள் வழங்குவதில் தாம தம் ஏற்பட்டது. பொருட்களை பொங்கல் நாளில் இருந்து தர முயற்சி எடுத்து, அதற்காக பணிபுரிந்து வருகிறோம்" என்று குறிப்பிட்டார்.

ஐந்தரை ஆண்டுகளாக ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு, வெறுப் பின் உச்சத்தில் இருக்கும் புதுச் சேரி மக்கள், தீபாவளி இலவச அரிசி அறிவிப்பால் மீண்டும் பழைய நிலை திரும்பும் என்ற எதிர் பார்ப்பில் இருந்தனர். ஆனாலும், பொங்கலைத் தாண்டியும் ரேஷன் விநியோகத்தில் புதுச்சேரிமாநிலம் தொடர்ந்து அதே நிலையில் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக் கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x