

காசோலை மோசடி வழக்கில் புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் மகன் சந்திரேஷுக்கு திருக்கோவிலூர் நீதி மன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
திருக்கோவிலூர் அருகே பிரிவுடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா, கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமனின் மகன் சந்திரேஷுக்கும் தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டது. இதை யடுத்து சந்திரேஷ், சின்னப்பாவி டம் ரூ.18 லட்சம் கடன் வாங்கி னார். கடந்த 2011-ம் ஆண்டு சின் னப்பா, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது புதுச்சேரி கனரா வங்கியில் மாற்றத்தக்க வகையில் ரூ.15 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் என தனித்தனியே 2 காசோசலைகளை சந்திரேஷ் கொடுத்துள்ளார். இதை சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்தியபோது கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.
இதுகுறித்து சின்னப்பா, கடந்த 2011-ம் ஆண்டு திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில் சந் திரேஷ் ரூ.5 லட்சம் கொடுத்தார். இதையடுத்து ரூ.3 லட்சத்துக்கான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சத் துக்கான வழக்கு நடைபெற்று வந்தது. இதில் சந்திரேஷ் கோர்ட் டில் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி சண்முக ராஜன் தீர்ப்பளித்தார். அதில், செக் மோசடி செய்ததற்காக சந்திரே ஷுக்கு 2 ஆண்டு மெய்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அப ராதமும் விதித்தார். சின்னப்பாவி டம் ரூ.13 லட்சத்தை உடனே செலுத்துமாறும் உத்தரவில் கூறி யிருந்தார்.
மேலும் நீதிமன்றத்தை அவ மதித்து ஆஜராகாமல் இருந்ததால் அவரை பிடித்து சிறையில் அடைக்க திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.