

தேமுதிக செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. அப்போது, திரு நெல்வேலி மாவட்டம், கடைய நல்லூர், குமாரபுரம் 1-வது வார்டு தேமுதிக செயலாளர் மணி யண் (38) என்பவர் மக்கள் நலக் கூட்டணியோடு தேமுதிக இணை யக் கூடாது என்று கூறி உண்ணா விரதம் இருந்தார்.
தேமுதிக நிர்வாகிகள், அவரை வெளியேற்ற முயன்றனர். அப்போது மணியன், விஜயகாந் துக்காக உயிரையும் கொடுப்பேன் என்று கூறி, மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து, அதிலிருந்த விஷத்தை அருந்தினார்.
அவரை அங்கிருந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆட் டோவில் ஏற்றினர். அதற்குள் மணியனை சூழ்ந்துகொண்ட தேமுதிக தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.