Published : 09 Apr 2016 09:42 AM
Last Updated : 09 Apr 2016 09:42 AM

திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும்: ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் திமுக கடந்த 6 மாத காலமாக ஈடுபட்டு வந்தது. திமுகவின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்ததாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது. தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வரும் 10-ம் (நாளை) தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x