Published : 16 Apr 2016 09:00 AM
Last Updated : 16 Apr 2016 09:00 AM

1971-ம் ஆண்டு போர் வெற்றி முப்படைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்தது: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதம்

1971-ம் ஆண்டு நடந்த போரில் பெற்ற வெற்றி, முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு கிடைத்தது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பெருமிதம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டனில் உள்ள முப் படை அதிகாரிகள் கல்லூரியில், 71-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் கடியோக் வரவேற்றார். தமிழக ஆளுநர் ரோசய்யா முன்னிலை வகித்தார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்து, 34 வெளிநாட்டு அதிகாரிகள் உட்பட 458 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த கல்லூரியில், தகுதி வாய்ந்த சிலர் மட்டுமே பயிற்சி பெற வாய்ப்பு பெறுகின்றனர். இங்கு, முப்படைகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படுவதன் காரண மாக, இந்த ஆண்டு தேசிய பயிற் சிக்கான ‘தங்க மயில்’ விருது வழங்கப்பட்டுள்ளது பெருமைக் குரியது.

இங்கு 45 வாரங்கள் ராணுவக் கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தலைமை ஏற்கும் வாய்ப்பு பெறும் போது, பெற்ற பயிற்சிகளைக் கொண்டு கற்பனை மற்றும் புதுமையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கல்லூரியின் பாடத்திட்டம், முப்படைகளின் ஒருங்கிணைப்பு பெற்றது. இந்த ஒருங்கிணைப்பு மூலமாக, போரில் வெற்றி கிடைக்கும்.

முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால்தான், 1971-ம் ஆண்டு நடந்த போரில் வெற்றி கிடைத்தது. இது இந்திய போர் வரலாற்றில் உச்சம். இந்தப் போரின் முடிவு, வங்காள தேசம் தனி நாடாக உருவாகக் காரணமானது.

செயல்திறனால் அமைதி, பாது காப்பு, ஒருமைப்பாடு, தேசப்பற்றை நிலைநிறுத்த வேண்டும். இங்கு பெற்றுள்ள பட்டம், உங்களது அறிவை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். ராணுவ தொழில்நுட் பங்கள், அறிவியல் மேம்பாடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அறிவுத் திறனால்தான், தேவை யான தருணத்தில் உரிய முடிவு எடுக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x