சாலை வசதி கேட்டு சோர்வடைந்த மலை கிராம மக்கள்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

சாலை வசதி கேட்டு சோர்வடைந்த மலை கிராம மக்கள்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கோட்டூர் மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோட்டூர் மலை, ஏரிமலை, அலைக்கட்டு என 3 மலை கிராமங் கள் உள்ளன. இதில் கோட்டூர் மலையில் சுமார் 500, ஏரிமலையில் சுமார் 500, அலைக்கட்டு கிராமத்தில் சுமார் 300 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமங்களுக்கும் இதுவரை சாலை வசதி இல்லை. 3 கிராமங்களுக்கு மின் வசதியும், அரசுப் பள்ளியும் மட்டும் சென்றடைந்துள்ளது.

சாலை வசதி இல்லாத நிலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் பெற முடியாமல் இந்த கிராம மக்கள் ஏங்கி வருகின்றனர். மலைக்கு பொருட்களை கொண்டு செல்லவும், மலையில் விளைபவற்றை கீழே கொண்டு வரவும் கழுதை தான் இவர்களுக்கு கைகொடுத்து வருகின்றன. கர்ப்பிணிகள், நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், விஷக்கடிக்கு ஆளானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது இவர்களுக்கு சவால் மிக்க பணியாக உள்ளது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்கள் கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு வருவோரிடம் சாலை வசதி கோரி முறையிட்டு இந்த கிராம மக்கள் சோர்வடைந்து விட்டனர். இந்நிலையில் தற்போது தேர்தலை புறக்கணிக்கப் போவதாக நேற்று முன்தினம் அறிவித்துள்ளனர். வட்டு வன அள்ளி முன்னாள் ஊராட்சித் தலைவர் பரமசிவம் தலைமையில் நேற்று முன்தினம் கோட்டூர் மலையடிவாரத்தில் இந்த மலை கிராம மக்கள் திரண்டனர்.

இதுபற்றி பரமசிவம் கூறியது: இவ்வளவு காலம் பலரிடமும் தொடர்ந்து மனு அளித்து ஏமாற் றத்தை மட்டுமே கண்டுள்ளோம். எங்கள் மலை கிராமங்களுக்கு சாலை வசதி வந்தால் மட்டுமே மலை யில் வசிப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். ஏமாற்றத்துக்கு மட்டுமே ஆளாகி வந்த நாங்கள் இந்த முறை தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். 3 மலை கிராமங்களிலும் சேர்த்து 700-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள னர். இந்த வாக்காளர்கள் அனை வரும் வரவிருக்கும் தேர்தலில் வாக்களிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாதவரை இனி எந்தத் தேர்தலிலும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்.

இவ்வாறு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in