

சென்னை: போகி பண்டிகை அன்று சென்னையில் விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின் முதல் திருவிழாவாக போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை நகரம் முழுவதும் பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை மாநகராட்சி இதற்கான எச்சரிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இம்முறை அபராதத்தையும் விதித்து விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
போகி அன்று விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அவ்வாறாக எரித்தால் ரூ.1000 அபராதம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தலையும் வழங்கி இருக்கிறது.